வெப்பம் அதிகரிக்கும் தமிழகத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவிப்பு | temperature will increase in tamil nadu

0
381

வெப்பம் அதிகரிக்கும் தமிழகத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவிப்பு | temperature will increase in tamil nadu 

temperature will increase in tamil nadu
temperature will increase in tamil nadu 

 

சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 23) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் மற்றும் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவிப்பு.
 
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
 
நேற்று காலை 8:30 மணியளவில் வடக்கு அந்தமான் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5: 30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மியான்மர் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.
 
வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5:30 மணியளவில் மியான்மர் கடற்கரையை கடந்தது.இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இன்று காலை 8:30 மணிக்கு மியான்மர் பகுதியில் நிலவியது. இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.