நெமிலி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி..!!

0
20

நெமிலி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி..!!Bike Accident in Nemili..!!

Accident

ADVERTISEMENT

நெமிலி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து மேற்குவங்காளம் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேற்கு வங்க மாநிலம் பிங்லா பகுதியை சேர்ந்தவர் தோஹன் திவாரி (26). இவர் தனது நண்பர்களு டன் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தங்கி அரக்கோணம் – காஞ்சிபுரம் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த 22ம் தேதி இரவு வழக்கம் போல தான் தான் தைங்கியுள்ள இடத்தில் இருந்து வேலைக்காக காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் சென்றுள்ளார்.அப்போது பள்ளூர் கிராமத்தின் அருகே செல்லும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரமாக கீழே விழுந்துள்ளார்.

Bike Accident in Nemili

இதில் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்து மயக்கம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது போன்ற செய்திகள் மற்றும் விலம்பரத்தை காட்ட 7010942885 எண்ணுக்கு தெரிவிக்கவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.

JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE

JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE