கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

0
257

கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

Gov and farmer

தமிழ் நாட்டில் விவசாயம்,நீர்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்காக தான் கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றும் நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் ,கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்க இருக்கிரார்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறை சார்பில் ரூ.227 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் நாளை முதல்வர் வழங்குகிறார்.அந்த வகையில்,விவசாயிகளுக்கு தென்னங்கன்று, காய்கறி,பழச்செடிகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

மேலும்,இத்திட்டத்தின் மூலம்,தமிழக கிராமங்களில் தரிசாக இருக்கும் நிலங்களை சாகுபடிக்கு ஏற்றவாறு மாற்றுதல்,நீர்வள ஆதாரங்களை அதிகரித்தல்,சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல்,வேளாண் விளைபொருட்களின் மதிப்பினைக்கூட்டி அதனை சந்தைப்படுத்துதல், மேலும்,கால்வாய் பாசன நீர் வழித்தடங்களை தூர் வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இது போன்ற செய்திகள் மற்றும் விலம்பரத்தை இலவசமாக காட்ட 7010942885 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் .

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.

JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE

JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here