தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு..!!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பூட்டுத்தாக்கில் அமைந்துள்ள சி.எம்.சி மருத்துவமனை திறந்திடவும், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் புதிய கட்டிடம் திறந்திடவும், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் வருகை தரும் தமிழின தலைவர் தமிழக முதல்வர் அவர்களுக்கு காலை 9 மணி 20/06/2022 அளவில் வாலாஜா டோல்கேட் அருகில்,
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர், துணிநூல் துறை அமைச்சர், ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், R.காந்தி
அவர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க இருப்பதால் அனைத்து
இளைஞரணி ஒன்றியம், நகரம், பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
இப்படிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்,
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் JL.ஈஸ்வரப்பன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் S.G.C.பெருமாள், V.S.முரளி ,W.M.நிர்மல், ராகவன், முகமது அலி.