நெமிலி அருகே பெற்றோர் பைக் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை..!!

0
21

பெற்றோர் பைக் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை..!!

Suicide

ADVERTISEMENT

நெமிலி அடுத்த திருமாதலம்பாக்கத்தை சேர்ந்தவர் சேட்டு, விவசாயி. இவரது மகன் குமரேசன் (19). இவர் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த வாரம் குமரேசன் தனது பெற்றோரிடம் தனக்கு கல்லூரி சென்றுவர பைக் வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

Also Read – AIRPORT JOB

அதற்கு அவரது தந்தை தற்போது பைக் வாங்க வேண்டாம். கல்லூரி படிப்பு முடிந்ததும் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த குமரேசன் கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதுபோல் சென்றுள்ளார். ஆனால், கல்லூரிக்கு செல்லாமல் நெமிலி அருகே உள்ள ஆட்டுப்பாக்கம் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள வயல்வெளிக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து அங்கேயே மயங்கி விழுந்தார்.

PLEASE SUBSCRIBE TO OUR YOUTUBE CHANNEL – CLICK HERE

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் குமரேசனை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேட்டு நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்ஜீவுலு வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

PLEASE SUBSCRIBE TO OUR YOUTUBE CHANNEL – CLICK HERE

JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE