
அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலியானது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் கிளிவீதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது ராட்சத கிரேன் மூலம் சாமிக்கு மாலை அணிவிக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், முத்து, பூபாலன், ஜோதிபாபு ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெமிலி அருகே மயிலார் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து…
பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு…
சிகிச்சை பெற்றுவந்த சின்னசாமி என்பவர் மரணம்