நெமிலி தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா.!!
நெமிலி தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 26 லட் சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் சப் கலெக்டர் வழங்கினார். மக்களின் மனுக்கள் மீது விரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.நெமிலி தாலுகா அலுவலகத்தில் கடந்த 5 நாட்களாக சப் கலெக்டர் சத்யப் பிரசாத் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு நெமிலி தாசில்தார் ரவி தலைமை தாங்கி வரவேற்றார்.
Also Read – Nemili
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவில் நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் உள்வட்டங்களை சேர்ந்த 66 வருவாய் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 442 மனுக்களை அளித்தனர்.இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், விதவை உதவித் தொகை, முதியோர் உத வித்தொகை கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித் தொகை, புதிய ரேஷன் கார்டு. இயற்கை இடர் பாடுகள் உதவித்தொகை, சிறுபான்மையினர் நலத் துறைசார்ந்த நலத்திட்ட இடுபொருட்கள் தென்னங்கன்று வழங்குதல், தோட்டக்கலை பயிர் களை உற்பத்தி செய்ய விதைகள். வருமான சான்று, ஒருங்கிணைந்த சான்று உள்ளிட்ட 26,35,559 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சப் கலெக்டர் சந்யப் பிரசாத் வழங்கினார்.
Nemili Taluck Office,
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது சமூக பாதுகாப்பு தாசில்தார் ரேவதி, துணை தாசில் தார்கள் மகாலட்சுமி. அருள்செல்வன், விஜய பாஸ்கர், வட்ட வழங்கல் அலுவலர் கன்னியப்பன், வருவாய் ஆய்வாளர்கள் மருதாச்சலம், தினகரன், விஏஓக்கள் டோமேசன், மணிகண்டன், கோபி நாத், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது போன்ற செய்திகள் மற்றும் விலம்பரத்தை காட்ட 7010942885 எண்ணுக்கு தெரிவிக்கவும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE
JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE