நெமிலி சுற்றுபகுதியில் உள்ள நாய்களால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

0
29

நெமிலி சுற்றுபகுதியில் உள்ள நாய்களால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

Nemili-Panapakkam

Accident due to dogs,

ADVERTISEMENT

நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் சுமார் 47 ஊராட்சி கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் குறைந்தபட்சம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளது. இதனால் நெமிலியில் BDO அலுவலகம், தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம்,ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள் என பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் அதிக அளவு நாய்கள் இருந்து வருவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் நெமிலியில் இருந்து சுற்றி உள்ள கிராம பகுதிகளில் சாலைகளில் அதிக அளவு நாய்கள் உலாவி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மற்றும்பகல் நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்துகள் ஏற்ப்படுகிரது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also read – Accident in Nemili

இது போன்ற செய்திகள் மற்றும் விலம்பரத்தை காட்ட 7010942885 எண்ணுக்கு தெரிவிக்கவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.

JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE

JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE