ராணிப்பேட்டை ஏரி நீர் பாசன சங்கத் தேர்தல் | வேட்பு மனு தாக்கல்

0
180

ராணிப்பேட்டை ஏரி நீர் பாசன சங்கத் தேர்தல் | வேட்பு மனு தாக்கல்

ராணிப்பேட்டை நீரிலை சங்கத் தேர்தல் | வேட்பு மனு தாக்கல்

 

நெமிலி, ஜூலை 2

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று நெமிலி வட்டாச்சியர் அலுவலகத்தில் சங்க தேர்தளுக்கான வேட்புமனு வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சேகர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் நெமிலி வட்டாட்சியர் ரவி, தனி வட்டாட்சியர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.

பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 8-07 2022 அன்று பரிசீலனை செய்யப்படுகிறது. பின்பு செல்லுபடியாகும் வேட்பு மனுக்கள் பட்டியலை வெளியிட்டு அன்று மாலையே வாபஸ் பெறலாம். வருகிற 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகிறது.

திருமால்பூர் பகுதியிலிருந்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு, நெமிலி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.ஜி.சி. பெருமாள் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நெமிலியில் நடைபெற்ற நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சேகர் பெற்றுக்கொண்டார். அருகில், நெமிலி வட்டாச்சியர் ரவி, தனி வட்டாச்சியர் ரேவதி ஆகியோர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here