எஸ்.கொளத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி துவக்க விழா..!
தமிழ் நாட்டில் விவசாயம், நீர்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்காக தான் கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றும் நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் ,கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் .
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம் நெல்வாய் ஊராட்சி எஸ்.கொளத்தூர் கிராமத்தில் தமிழ் நாடு அரசின் வேளாண்மை உழவர் துறையின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-2022 காணொளி காட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி. சுந்தரம்மாள் பெருமாள் கலந்துகொண்டார்.
நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி . ரேணுகாம்பாள் சுப்பிரமணி, டெபுடி பி டி ஒ திரு .பரமசிவன்,துணை வேளாண்மை அலுவலர் திரு .எஸ். ராமமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர் பிரியா, உதவி தோட்டக்கலை அலுவலர் தமிழரசு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு .எஸ். ஜி. சி. பெருமாள், நெல்வாய் ஊராட்சி செயலாளர் செந்தில் , ஊராட்சி மன்ற துணை தலைவர் தனலட்சுமி தனசேகர் ,விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE
JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE