திருப்பத்தூரில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
606

திருப்பத்தூரில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்

  • புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ரிப்பனை வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றினார்.
  • பின்னர் கலெக்டர் அறையில் அமர்ந்துக்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு முதலமைச்சர் சென்றார்.

திருப்பத்தூர்:

தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்கள் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இதன் காரணமாக நேற்று இரவு சென்னையில் இருந்து கார் மூலம் ஆம்பூருக்கு வந்து தங்கினார் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்.

திருப்பத்தூரில் ரூ.110 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று காலையில் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக காரில் திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்

 

பின்னர் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் கலெக்டர் அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் சென்றார்.

திருப்பத்தூர் நகரமே இன்று காலையில் விழா கோலம் :

திருப்பத்தூர் நகரமே இன்று காலையில் விழா கோலம்

தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வருகையை யொட்டி திருப்பத்தூர் நகரமே இன்று காலையில் விழா கோலம் பூண்டிருந்தது. திருப்பத்தூரில் நடைபெற்ற விழா நிறைவடைந்ததை அடுத்து அங்கிருந்து காரில் வேலூருக்கு முதலமைச்சர் புறப்பட்டு வந்தார்.ரூ.54 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலூர் புதிய பஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் திரு. மு.க. ஸ்டாலின்.

 

தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர். காந்தி அவர்கள், எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி, கதிர் ஆனந்த் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் அலுவலர்கள் ஊழியர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

 

தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்

இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். விழாவில் வேலூர் மாவட்டத்தில் ரூ.62 கோடியே 10 லட்சத்தில் முடிவற்ற 17 திட்ட பணிகளை திறந்து வைத்தும், ரூ.32 கோடியே 89 லட்சம் மதிப்பில் 50 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு ரூ.360 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் .

விழாவில் நலத்திட்ட உதவிகள் பெரும் பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழாவினை தொடங்கும் முன்பாக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதில் அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே முதலமைச்சரிடம் இருந்து நலத்திட்ட உதவிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகள் விழாவில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழா நிறைவடைந்ததும் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ராணிப்பேட்டை செல்கிறார். அங்கு தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here