நெமிலி அருகே பெண்களை தாக்கிய தொழிலாளி கைது..!!
நெமிலி அருகே பெண்களை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்(27), கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த முனுசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
Also Read – jamabandi closing in nemili taluk
இந்நிலையில், நேற்று ரஞ்சித் தனது வீட்டின் அருகே உள்ள குப்பைகளை அகற்றி, அதனை முனுசாமியின் வீட்டின் அருகே கொட்டினாராம். இதைப்பார்த்த முனுசாமியின் மகள் ஆனந்தி, ‘குப்பைகளை ஏன் எங்கள் வீட்டின் அருகே கொட்டுகிறீர்கள்’ என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித், ஆனந்தியை சரமாரி தாக்கினாராம். இதனை தடுக்க முயன்ற ஆனந்தியின் தாய் மற் றும் சகோதரியையும் தாக்கியுள்ளார்.
Fight near nemili,
படுகாயமடைந்த 3 பேரும் அரக்கோணம் அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து ஆனந்தி நெமிலி போலீசில் நேற்று அளித்த புகா ரின்பேரில், எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ரஞ்சித்தை கைது செய்து, அரக்கோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது போன்ற செய்திகள் மற்றும் விலம்பரத்தை காட்ட 7010942885 எண்ணுக்கு தெரிவிக்கவும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.
JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE
JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE